ஒரு மெசேஜில், சிதைந்து போன குடும்பம்.. தாய், மகளை தொடர்ந்து.. தந்தையும் விபரீதம்.! 

ஒரு மெசேஜில், சிதைந்து போன குடும்பம்.. தாய், மகளை தொடர்ந்து.. தந்தையும் விபரீதம்.! 


madurai narimedu family suicide in same time

மதுரை நரிமேடு பகுதியில் இருக்கும் 38 வயது காளிமுத்து தச்சு தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவரது மனைவி ஜாக்குலின் ராணிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். எனவே, மதுமதி என்ற 12 வயது குழந்தையுடன் சேர்ந்து மனைவிக்கு காளிமுத்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த நிலையில், நேற்று ஜாக்குலின் மற்றும் மதுமதி இருவரும் வீட்டிற்குள் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. 

madurai

போலீசார் ஊட்டிய வீட்டில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஒரே சேலையில் இருவரும் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. வீட்டிற்குள் குருணை மருந்து கிடந்ததால் மருந்தை கொடுத்து பின் தூக்கு போட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த வீட்டில் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது காளிமுத்து விடைபெறுகிறேன் நன்றி என்று கூறி விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

madurai

காளிமுத்து உயிரிழந்ததை தெரிந்து கொண்ட மனைவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் கடன் வாங்கி காளிமுத்து ஒரு புல்லட் வாங்கியுள்ளார். இதனால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

கடன் தொல்லை காரணமாக காளிமுத்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. ஆனால், மனைவி மற்றும் குழந்தை இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டுக் கொண்டது ஏன் என்பது போலீசாருக்கு தெரியவில்லை. எனவே, தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.