மதுரை: காதல் திருமணம் செய்த ஜோடி எஸ்.பி ஆபிசில் தஞ்சம்.. பெண் குடும்பத்தினர் அரசியல் பின்புலத்தால் மரண பயம்.!

மதுரை: காதல் திருமணம் செய்த ஜோடி எஸ்.பி ஆபிசில் தஞ்சம்.. பெண் குடும்பத்தினர் அரசியல் பின்புலத்தால் மரண பயம்.!


Madurai Love Married Couple At SP Office about Life Fear From Their Parents Opp to Marriage

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி, பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், சருகுவளையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தராஜா. இதே கிராமத்தை சேர்ந்த பெண்மணி கமலி மேகம். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே, கமலி மேகத்தின் வீட்டில் வரன் பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும் திருமண ஏற்பாடுகளும் நடந்துள்ளது. 

madurai

இதனால் அதிர்ச்சியடைந்த கமலி மேகம், நான் வசந்தராஜாவை தான் திருமணம் செய்வேன் என்று கூறி, பெற்றோரை எதிர்த்து கடந்த 8 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். காதல் ஜோடி பழனி முருகன் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணமும் செய்துள்ளனர்.

இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத கமலி மேகத்தின் குடும்பத்தினர் மிரட்டல் விடுப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சம் புகுந்துள்ளனர். 

மேலும், கமலி மேகத்தின் பெற்றோர் பணபலம் மற்றும் அரசியல் பலத்துடன் இருப்பதால், எங்களை கொலை செய்து விடுவார்கள் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.