10 வருஷமாச்சு.. நம்பவே முடியலை.! செம ஹேப்பியில் நடிகை சினேகா.! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா??
#Breaking: எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை - மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.!

கரூர் மாவட்டத்தில் உள்ள நெமூர் பகுதியில், நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் பக்தர்கள், தங்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டி பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்வதை வாடிக்கையாக கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2015 ம் ஆண்டுக்கு பின்னர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், எச்சில் இலையில் அங்கபிரசட்சணம் செய்வது தடுக்கப்பட்டது. பின் கடந்த ஆண்டு சபா நிர்வாகத்தின் சார்பில் முறையீடு செய்யப்பட்டு, மீண்டும் அனுமதி பெறப்பட்டது.
இதனிடையே, திருவண்ணாமலை கோவிலில் பணியாற்றி வரும், தமிழ்வழிக்கல்வி அர்ச்சகர் அரங்கநாதன், எச்சில் இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கூறி மனுதாக்கல் செய்தார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: மதுரை: பெண்ணின் அழுகிய சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; இருவர் கைது.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
அனுமதி ரத்து
விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முன்னதாக தனிநீதிபதி வழக்கை விசாரித்து அங்கபிரதட்சணம் செய்ய வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், நீதிபதிகள் வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில், "எச்சில் இலையில் அங்கபிரசட்சணம் எனப்படும் செயலை செய்வது அவர்களின் வழிபாட்டு முறை என்றாலும், அது தனிமனித சுகாதாரம் மற்றும் மாண்புக்கு உகந்தது இல்லை என நீதிமன்றம் கருதுகிறது.
இதனால் பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கபிரசட்சணம் செய்ய அனுமதி கிடையாது. தனிநீதிபதியின் தரவும் ரத்து செய்யப்படுகிறது. எச்சில் இலையில் அங்கபிரசட்சணம் செய்ய நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை: கபடி விளையாட்டில் நேர்ந்த சோகம்.. இளம் வீரர் பரிதாப பலி.. ஊரே திரண்டு கண்ணீருடன் அஞ்சலி.!