மதுரை: கபடி விளையாட்டில் நேர்ந்த சோகம்.. இளம் வீரர் பரிதாப பலி.. ஊரே திரண்டு கண்ணீருடன் அஞ்சலி.!



in Madurai a Kabaddi Player Dies 

கபடி வீரர் ஒருவர் விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று வந்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

மதுரை மாவட்டத்தில் உள்ள பொய்கைகரப்பட்டி கிராமத்தில், கடந்த மார்ச் மாதம் 04ம் தேதி கபாடி போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த கபாடி வீரர்களும் போட்டியில் கலந்துகொண்டு இருந்தனர். ரசிகர்கள் ஆரவாரத்துடன் போட்டி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டம், மந்திரி ஓடை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகன். இளைஞர் ஜெகன் பொய்கைக்கரைப்பட்டி கிராமத்தில் நடந்த கபடி போட்டியில், சில்வர் மவுண்டன் அணியின் சார்பாக களமிறங்கி இருந்தார். 

இதையும் படிங்க: மதுரை: 18 வயதில் வழிப்பறி கொலை., 20 வயதில் வழக்கு விரக்தியால் தற்கொலை.. இளைஞரின் விபரீத முடிவு.!

madurai

காயம் ஏற்பட்டு சோகம்

அப்போது, அவரை எதிரணியினர் பிடிக்க முற்பட்டபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனால் அவர் கடுமையான உடல்நலக்குறையை எதிர்கொண்ட நிலையில், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டார். 

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கிராமத்தினர் மற்றும் கபடி ரசிகர்கள் பலரும் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

இதையும் படிங்க: 15 பவுன் நகை ஆட்டோவில் தவற விட்ட நபர்.. தேடிச்சென்று கொடுத்த ஆட்டோ டிரைவர்.!