தமிழகம்

கல்லூரி காதலனை நம்பி தெருவில் தவிக்கும் பெண் வங்கி ஊழியர்.. உல்லாச அல்வா கொடுத்து, கைவிட்ட கொடூரம்.!

Summary:

கல்லூரி காதலனை நம்பி தெருவில் தவிக்கும் பெண் வங்கி ஊழியர்.. உல்லாச அல்வா கொடுத்து, கைவிட்ட கொடூரம்.!

காதலனை நம்பி கடன் கொடுத்த காதலியுடன் பலமுறை உல்லாசமாக இருந்து கைவிட்டதால், தனது வாழ்க்கையை இழந்து தெருவில் தவிக்கும் நிலைக்கு பெண்மணி தள்ளப்பட்ட சோகம் நடந்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண், தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்தபோது, தனது கல்லூரி காதலால் வாழ்க்கை சீரழிந்து தவிப்பதாக கூறி அங்கேயே கதறி அழுதார். 

இதுகுறித்த புகாரில், "தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த போது, விளாச்சேரி பகுதியைச் சார்ந்த நாகூர்கனி என்பவரின் மகனான சிராஜிதீன் என்பவரும் - நானும் காதலித்து வந்தோம். அவரின் தண்ணீர் கேன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற போது, என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். 

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை என்னிடம் எல்லை மீறி நடந்த நிலையில், அவனின் மீதான நம்பிக்கையில் ரூபாய் 3 லட்சம் வரை பணம் கொடுத்து உதவினேன். அதனைத்தவிர்த்து, தங்க மோதிரம், ஸ்மார்ட்போன் என பல பரிசுகளும் வாங்கி கொடுத்தேன். தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது, அதற்கு எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறினான். 

மேலும், வீட்டில் வேறொரு பெண் பார்த்து அவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரின் வாழ்க்கையையும் சேர்த்து கேள்விக்குறியாக்கி விட்டார். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று கூறி, காதலருடன் எடுத்த புகைப்படம் மற்றும் பணம் அனுப்பிய ஆதாரங்கள் போன்றவற்றை புகாருடன் இணைத்து கொடுத்துள்ளார். 

எனது வீட்டில் விஷயம் தெரிந்து என்னை அவர்கள் வெளியேற்றிவிட்ட நிலையில், பாட்டி வீட்டில் நான் தவித்து வருவதாகவும் அந்த பெண் வங்கி ஊழியர் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தனது புகாரை அளித்துள்ளார். பள்ளி பருவ காதலோ, கல்லூரி காதலோ காதல் என்றால் என்னென்ன மாதிரியான விபரீதங்களும் என்பதற்கு இந்த சம்பவங்களும் ஒரு சாட்சி..


Advertisement