#JustIN: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆப்பு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..!

#JustIN: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆப்பு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..!


Madurai Court Order to TN Govt Teachers Could Not Work Private Tuition Center

அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர்கள், தங்களின் வருமான நோக்கத்திற்காக தனியார் டியூசன் சென்டரில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதாக தமிழகம் முழுவதும் பரவலான குற்றசாட்டுகள் நிலவி வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இம்மனு மீதான இன்றைய விசாரணையில், "அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் அல்லது தனியார் டியூசன் சென்டரில் ஆசிரியர்கள் பணியாற்றினால், அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட வாரியாக பிரத்தியேக குழுக்கள் ஏற்படுத்தி, ஆசிரியர்களின் செயல்பாடுகளை மாவட்ட கல்வித்துறை கண்காணிக்க வேண்டும். 

Madurai Court

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு செயல்திட்டங்களை தீட்டியுள்ள நிலையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூடுதல் வருமான நோக்கத்திற்காக செயல்படாமல் மாணவர்களின் தரத்தினை உயர்த்த வேண்டும். 

பல்வேறு நாடுகளில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி பயிற்றுவிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் அதே கல்வி கொடுக்கப்பட்டாலும், தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசுப்பள்ளி மாணவர்கள் போட்டிபோட இயலாத சூழலே பெருமளவு உள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும். மீறி நடக்கும் பட்சத்தில் அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படுகிறது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.