BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
எதையும் தாங்கும் இதயம் உள்ள அரசு!.. மாண்டஸ் புயலை ஊதி தள்ளிவிட்டோம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு எவ்விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கவனித்ததுடன், உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவே, எவ்வளவு மழை வந்தாலும், எவ்வளவு வேகமாக காற்று வீசினாலும், சமாளிக்கவும், இடர்களில் இருந்து மக்களை காக்கவும் எங்கள் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மாவட்டங்களில் உள்ள முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு உரிய வகையில் எச்சரிக்கை அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. மக்களும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.