நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த காதலர்கள்.. காதலிக்கு வேறு சிலருடன் தொடர்பு.. ஆத்திரமடைந்த காதலனின் வெறிசெயல்..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் டிரைவரான கணேசன். இவர் பழனியை சேர்ந்த பவளக்கொடி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பவளக்கொடி வேறு சில நபருடன் கள்ளத்தொடரில் இருந்ததை அறிந்த கணேசன் ஆத்திரமடைந்து பவளகொடியை கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தன்று பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக பவளக்கொடி காத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது காதலனான கணேசன் கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி கூறியுள்ளார். இதில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவளக்கொடியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனைதொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பவளக்கொடி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலையில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் பவளக்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணேசனை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.