"என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா நீ செத்த"..! ஆயுதத்துடன் வந்த வாலிபருக்கு நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

"என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா நீ செத்த"..! ஆயுதத்துடன் வந்த வாலிபருக்கு நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!


Lover say to girl friend,if you marry some else I will kill you

திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் கௌதம். கௌதமிற்கும் புதுக்கோட்டை மாவட்டம் சாந்தனாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அந்தப் பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள போவதாக கௌதமிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌதம் தன்னை மட்டுமே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அப்பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.

Tirupattur

ஆனால் அப்பெண் இதற்கிடையில் வேறு ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ஆத்திரமடைந்த கௌதம் நேராக அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். இதனால் பதறிப் போன பெற்றோர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கௌதமை கைது செய்து, அவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கௌதம் மீது கொலை மிரட்டல் அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் போன்ற ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.