நீ தாலி கட்டினால் தான் ஜாமின்... நீதிபதியின் அதிரடி உத்தரவால் காதலிக்கு தாலி கட்டிய காதலன்...

நீ தாலி கட்டினால் தான் ஜாமின்... நீதிபதியின் அதிரடி உத்தரவால் காதலிக்கு தாலி கட்டிய காதலன்...


Lover married his girlfriend in court

புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித், சத்யாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரை கர்ப்பமாக்கியுள்ளார்.

அதில் சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்த அஜித்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

lovers

புகாரின் பேரில் போலீசார் அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சத்யாவை திருமணம் செய்தால் மட்டுமே ஜாமின் வழங்குவதாக கூறியுள்ளனர். 

நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் முன்னிலையில் கைக்குழந்தையுடன் வந்த சத்யாவை திருமணம் செய்ததை அடுத்து அஜித்க்கு ஜாமின் வழங்கப்பட்டது.