காதலன் கொடுத்த வாழைப்பழத்தை நம்பி சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! வெளியான அதிரவைக்கும் காரணம்!



lover gave poison to young girl

கும்பகோணம் அருகே நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவர் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர்  கோபிநாதபெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.ஐயப்பன் தனியார் மகளிர் சுய உதவிக்குழு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழ் ஐயப்பனிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

மேலும் தமிழ் வேறு ஒருநபருடன் பேசிக் கொண்டிருப்பதாக அறிந்த ஐயப்பன் அவர் மீது பயங்கர கோபம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும் இருவருக்கும் கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபப்பட்ட ஐயப்பனிடம் தமிழ் நான் அந்த நபருடன் நண்பராகத்தான் பழகி வருகிறேன். நீ நினைப்பதுபோல் ஒன்றும் இல்லை, சந்தேகப்படாதே என கூறியுள்ளார்.

banana

அதனை தொடர்ந்து அவர் தானே வீட்டில் விடுவதாக கூறி தமிழை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நாம் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என தமிழை நம்பவைத்து எலி மருந்து வைத்த வாழைப்பழம் ஒன்றை ஐயப்பன் அவரிடம் கொடுத்துள்ளார். அவரும் நம்பி அதனை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் ஐயப்பன் விஷம் வைத்த வாழைப்பழத்தை சாப்பிடவில்லை.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற தமிழ் நடந்த அனைத்தையும் தனது தந்தையிடம் கூறியுள்ளார் அவர் தமிழை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்கு வாழைப்பழத்தில் விஷம் கொடுத்து கொன்ற ஐயப்பனை கைது செய்தனர்.