நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதிய லாரி... அப்பளம் போல நொறுங்கியதில் 12 பேர் படுகாயம்..!lorry-hit-the-government-bus

நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிதம்பரத்திலிருந்து வேலூரை நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. அப்போது பேருந்தை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே சே.வட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டி வந்துள்ளார். வெறையூர் அருகே பேருந்து வந்தபோது, இயற்கை உபாதைக்காக பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் டிரைவரிடம் கூறியுள்ளனர். 

Chithambaram

இதனால் அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு அருகே சாலை ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது கடலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் பேருந்தின் ஒரு பக்கம் அப்பளம் போல நொறுங்கி நிலையில், லாரி டிரைவருடன் சேர்த்து 12 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 12 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.