தமிழகத்தின் மூன்று மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தின் மூன்று மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!



local-holyday-for-onam

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படும்போது அந்த மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி, தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல பாரம்பரியமான ஓணம் பண்டிகை கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், கோவை மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 12ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

holy day

இதனையடுத்து சென்னையில், கேரள மக்கள் அதிகம் வசிப்பதால் ஓணம் பண்டிகை தினத்தன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப் படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் 31 ஆம் தேதி ஓணம் பண்டிகையை கொண்டாட  இருப்பதால், அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்களுக்கும், உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.