உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த தமிழக அரசு!

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த தமிழக அரசு!



leave for election


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில், அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

election

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைத்துத் துறை செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பஞ்சாயத்து சட்டப்படி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை காலத்தில் பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தை பிடிக்கக் கூடாது எனவும் இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சண்முகம்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.