திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையடுத்து இனி திருச்செந்தூர் கோவிலிலும் லட்டு!

திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையடுத்து இனி திருச்செந்தூர் கோவிலிலும் லட்டு!



laddu in thiruchandur murugan temple

பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோரும் உள்ளூர் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பல பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாளை மறுநாள் (8ம் தேதி) தைப்பூச திருநாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கோவிலுக்கு வருவார்கள். இதனால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும்   கந்தசஷ்டி, தைப்பூச விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

murugan

திருவிழாக் காலங்களிலும்,கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களிலும் ரூ20,ரூ100,ரூ250 ஆகிய கட்டண தரிசன வரிசைகளில் நின்று பக்தர்கள்  சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருசெந்தூர் ஆலயத்தில், ரூ250 கட்டணம் செலுத்தி தரிசன வரிசையில் வரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு பின்னர் பிரசாதமாக பன்னீர் இலை விபூதியும், லட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிவித்துள்ளார். 

திருப்பதி  மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதுபோல், இனிமேல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலிலும்  பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படவுள்ளது.