உங்கள் ஆசீர்வாதம் எனக்கு எப்பொழுதும் இருக்கும்.. மிஸ் யூ அப்பா.! குஷ்பு உருக்கமான பதிவு.!

உங்கள் ஆசீர்வாதம் எனக்கு எப்பொழுதும் இருக்கும்.. மிஸ் யூ அப்பா.! குஷ்பு உருக்கமான பதிவு.!


kusboo-tweet-about-kalaingar

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதனால், பலரும் அவரது நினைவலைகளை இணையத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், திமுகவில் அரசியல் பயணத்தை துவங்கி, காங்கிரஸ் கட்சிக்கு சென்று, தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், உங்கள் இடம் இன்னும் வெற்றிடமாய் இருப்பதை  நான் ஒருநாள் கூட நினைக்காமல் இருந்ததில்லை. ஒரு குரு கடவுளுக்கு மேலே இருக்கிறார். நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள். நிச்சயம் உங்கள் ஆசீர்வாதம் என்மேல் பொழிந்து கொண்டே இருக்கும். மிஸ் யூ அப்பா என பதிவிட்டுள்ளார்.