தமிழகம்

குன்றத்தூர் அபிராமி வெர்சன் 2!. தமிழகத்தையே அதிர்ச்சியடையவைத்த கொடூர சம்பவம்!.

Summary:

Kundarathur abirami version 2

வேலூர் மாவட்டத்தில் தனசேகர் - ஜெயந்தி தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தன. இந்த நிலையில் ஜெயந்திக்கும், அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டு இருவருக்குள்ளும் கள்ளக்காதல் உருவாகியது.

கோபாலகிருஷ்ணன், ஜெயந்தியையும் சாமிகும்பிட செல்வதாக கூறி அவரது 2 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடந்த மாதம் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று பல நாட்கள் ஆகியும், வீடு திரும்பாததால், ஜெயந்தியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.

இவர்கள் வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். அவர்களின் சந்தோசத்திற்கு தடையாக இருந்த ஜெயந்தியின்  மூத்த மகளை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு உல்லாசமாய் இருந்துள்ளனர். வேளாங்கண்ணிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லையே என்று ஜெயந்தியின் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.

இதனை அறிந்த கோபாலகிருஷ்ணனும் , ஜெயந்தியும் மற்றொரு மகளுடன் அங்கிருந்து ஆந்திரா சென்றுள்ளனர். இவர்கள் தங்களை போலீசார்  தேடுவதை அறிந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

குன்றத்தூர் அபிராமியை விட கொடுமையான செயலை செய்த ஜெயந்தியின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 


Advertisement