சாலை விரிவாக்க பணி பள்ளத்தில், ஸ்கூட்டருடன் விழுந்து பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

சாலை விரிவாக்க பணி பள்ளத்தில், ஸ்கூட்டருடன் விழுந்து பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!


kumbakonam-men-dead-accidentally-road

சாலை விரிவுபடுத்தும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கும்பகோணம் அருகாமையில் மருதாநல்லூர் பகுதியில் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக வாய்க்கால்கள் உள்ள பகுதியில் சாலைகள் உடைக்கப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதிகாலை கும்பகோணம் கோ.சி.மணி நகரில் வசித்து வந்த மோகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அந்த வழியே சென்றுள்ளார். அப்போது சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை பார்க்காமல் சென்றதில், அவர் தவறிக் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து அருகிலிருந்தவர்கள் பார்த்தவுடன், காவல்துறையினருக்கு பள்ளத்தில் யாரோ விழுந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மோகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

kumbakonam

அத்துடன் விசாரணை நடத்திய நிலையில் பள்ளம் இருக்கிறது என்பதனை உணர்த்தும் வகையில், எச்சரிக்கை நாடாக்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் அதிகாலை நேரம் என்பதால் பார்வை குறைபாடு காரணமாக அவர் பள்ளத்தில் விழுந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.

ஆனால், மோகனின் உறவினர்களோ நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் மட்டுமே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் பேசி வருகின்றனர்.