512 கோடியில் தேசிய நெடுஞ்சாலை; இல்லையா பதவி விலக தயார் அமைச்சர் சவால்!

512 கோடியில் தேசிய நெடுஞ்சாலை; இல்லையா பதவி விலக தயார் அமைச்சர் சவால்!



krishnakri---dindukkal-national-highway---mp-ashok-kuma

தேர்தலுக்கு முன் ரூபாய் 512 கோடியில் கிருஷ்ணகிரி முதல் திண்டுக்கல் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்படும். அவ்வாறு இல்லையெனில் பதவி விலக தயார் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனுக்கு அமைச்சர் அசோக் குமார் சவால் விடுத்துள்ளார். 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக் குமார் அவர்கள் தலைமையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா இன்று, கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில்  நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் சிறுபான்மை நலப்பிரிவு மாநில இணை செயலாளர் முகமது ஜான் மற்றும் தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றினர்கள்.

mp ashok kumar

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அசோக் குமார்: கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ரூ.512 கோடி மதிப்பில் ஒரு சில நாட்களில் டெண்டர் விடப்பட்டு அங்கே அந்த பணிகள் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலர்கள் ஏற்றுமதி நிலையம், தொழிலாளர்களுக்கான எம்பிளாய்மெண்ட் ஓய்வூதிய அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்டவை விரைவில் அமையவுள்ளது.

என்று தெரிவித்த அவர், கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த திமுகவினரால் இங்கே கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட முடியுமா? என கேள்வி எழுப்பினார். மேலும் நான் மேலே கூறிய கிருஷ்ணகிரி, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை தேர்தலுக்கு முன் தொடங்கப்படவில்லை என்றால் நான் பதவி விலக தயார் என்றும் இந்த போட்டிக்கு எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தயாரா என சவால் விடுத்தார்.