அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
திமுக பிரமுகரை அடித்து நொறுக்கி, வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. முன்விரோதத்தால் பயங்கரம்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் திமுக பிரமுகராக இருந்து வருகிறார். கணேசனுக்கும் - அதே பகுதியை சார்ந்த திமுக மாணவரணி மோகனசுந்தரம் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.
இதனால் இருதரப்பும் அவ்வப்போது மோதிக்கொண்டதால், முன்விரோதமும் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் கணேசன் தனது காரில் கோட்டைமேடு பகுதி அருகே வந்துகொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்கு நின்றுகொண்டு இருந்த மர்ம நபர்கள், கணேசனின் காரை இடைமறித்து அவரை தாக்கியுள்ளனர். பின்னர், கணேசன் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவேரிப்பட்டினம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.