9 ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் தாலி; ஷாக்கான ஆசிரியர்கள்., கிருஷ்ணகிரியில் பகீர்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, சிறுமிக்கும், காவேரிப்பட்டினம் பகுதியில் வசித்து வரும் 25 வயது நபருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த திருமணத்தைத்தொடர்ந்து, சிறுமி பள்ளிக்கும் வந்த நிலையில், அவர் தனது ஆடைக்குள் தாலியை மறைத்து வைத்தபடி பள்ளிக்கு வந்துள்ளார். ஆசிரியர்கள் அதனை எதற்ச்சையாக கண்டறிந்தனர்.
காவல் துறையினர் விசாரணை
பின் இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவ பணியாளருக்கு நேர்ந்த சோகம்; லாரியில் மோதி பலி.!
விசாரணையில், வீட்டு விசேஷம் என விடுப்பு எடுத்த மாணவி, திருமணம் செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியை திருமணம் செய்த 25 வயது இளைஞர், அவரின் பெற்றோர் ஆகியோரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி மருந்தின் டியூபை வாயில் வைத்து உரிஞ்சதால் நேர்ந்த சோகம்; விவசாயி பரிதாப பலி.!