மீண்டும் டாப் கியர் போட்ட தக்காளி.. முருங்கைக்காய் இவ்வுளவு விலையா?.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!Koyambedu Vegetable Market Vegetable Price Increased

காய்கறிகள் விலையானது தற்போது விண்ணை முட்டுமளவு உயர்ந்துக்கொண்டு செல்கிறது. தக்காளி விலை கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கிலோ ரூ.140 க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர், விலை குறைய தொடங்கி, ரூ.40 முதல் ரூ.50 வரை குறைந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ஏற்றத்தை கண்டு வரும் தக்காளி, கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.75 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு, விளைச்சல் பாதிப்பு மற்றும் கனமழையால் செடிகள் பாழாகியது போன்ற காரணத்தால் மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களிலும் விலை ஏற்றம் - இறக்கம் என்ற நிலையிலேயே தொடரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

chennai

இதனைப்போல, முருங்கைக்காய் கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் இருந்து முருங்கைக்காய் வருவதாக கூறப்படுகிறது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. பீன்ஸ், கத்தரிக்காய், அவரைக்காய், குடைமிளகாய் போன்றவற்றின் விலை சில நாட்களில் ரூ.100 ஐ தொட்டுவிடும். 

கேரட், பீர்க்கங்காய், கோவைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய் போன்றவை ரூ.50 க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை, வெள்ளம் காரணமாக இந்த விலையேற்றம் இருந்து வருகிறது. இன்னும் 1 மாதத்திற்கு இப்படியான சிலநேர விலையேற்றம் அல்லது வீழ்ச்சி இருக்கும் எனவும் தெரியவருகிறது.