கூகுளால் பெருமைப்படுத்தப்பட்ட தமிழக அரசு பள்ளி மாணவி; குவியும் பாராட்டுகள்.!



kovai - mattupalayam - tharshini - googl

ஏடிஎம் மெஷினில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்தற்காக தமிழகச் சிறுமிக்கு கூகுள் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருபவர் தர்ஷினி படிப்பில் சுட்டியான இவர் அறிவியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு ஏதாவது ஒரு புதுமையான கண்டுபிடிப்பு நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வெகு நாட்களாகவே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனத்தால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறன் வாய்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவியல் திறனாய்வு போட்டி நடத்தப்பட்டது.

அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்ட இப் போட்டியில் தனது ஆசிரியர் சரவணன் என்பவரின் உதவியால் தர்ஷினியும் கலந்துகொண்டு ஏடிஎம் மிஷினில் ரூபாய் நோட்டுகள் எடுப்பதை போன்று காயின்களை வரவழைக்கும் விதமாக வெண்டிங் மெஷினை தர்ஷினி உருவாக்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தார். இதற்கு அந்நிறுவனம் ஒப்புதல் அளித்து, சான்று வழங்கியுள்ளது. ”உங்கள் யோசனையை உலகுக்கு தெரிவித்தமைக்கு நன்றி” எனக் கூகுள் பாராட்டியுள்ளது.