கோடம்பாக்கம்: குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு... கடைசியில் நிகழ்ந்த விபரீதம்...

கோடம்பாக்கம்: குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு... கடைசியில் நிகழ்ந்த விபரீதம்...


Kodambakkam murder case about two friends

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு கடைசியில் கொலையில் முடிந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் மாதவன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் அதே பகுதியில் உள்ள டெய்லர் கடை ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளனர்.

Two friends

இந்நிலையில் சம்பவத்தன்று மாதவன், சரவணிடம் துணியை ஒழுங்காக தைக்குமாறு கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த சரவணன் ஊசியை எடுத்து மாதவனை தாக்கியுள்ளார்.

இதனால் கோபமான மாதவன் பதிலுக்கு கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து சரவணனின் இடது மார்பில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.