திமுக பிரமுகர் மகனின் கள்ளக்காதல் விவகாரம்... காதலியை தாக்கிய கொடூரம்... கண்டு கொள்ளாத போலீசார்...!!

திமுக பிரமுகர் மகனின் கள்ளக்காதல் விவகாரம்... காதலியை தாக்கிய கொடூரம்... கண்டு கொள்ளாத போலீசார்...!!


Kidnapping case of DMK leader's son... The brutal attack on his girlfriend...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாணிக்கரை பஞ்சாயத்தில் நூறு நாள் பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வருபவர் கல்பனா.

திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் நாகப்பன் மகன் வினோத்குமாருக்கும், கல்பனாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.   
இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திமுக பிரமுகர் மகன் கல்பனாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கல்பனா வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார். இந்நிலையில் கூம்பூர் காவல் நிலையம், வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர், வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் வினோத்குமார் மீது புகார் அளித்துள்ளனர். 
.
ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும், சம்பவம் நடந்து ஆறு மாதங்களாகிய நிலையில் ஆளுங்கட்சி நபரின் மகன் என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.