பிறந்து 7 நாட்களான பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் புகுந்து கடத்தல்.. போலீசாரின் செயலால் தாய், சேய் மகிழ்ச்சி..!!kidnapped-7-day-old-baby-into-the-hospital

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செரங்காடு பகுதியில் வசித்து வருபவர் கோபி. இவரின் மனைவி சத்யா. தற்போது இவர் நிறைமாத கர்ப்பிணையாக இருந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

உறவினர்களால் தாயும், சேயும் கவனிக்கப்பட்டு வந்தனர். அப்போது யாருமில்லாத நேரத்தில் அங்குவந்த மர்மநபர் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். உறங்கிக்கொண்டிருந்த சத்யா எழுந்து பார்த்தபோது குழந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். 

Tripur district

பின் இதுகுறித்து செவிலியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்கையில் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிறந்து 7 நாட்களான பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்ணை 12 மணிநேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டனர். அவரிடம் விசாரிக்கையில் திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தை இல்லாததால் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.