சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கேரளா இளைஞர் கைது.!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரங்கிமலை மதுவிலக்கு கமலக்கத்துறை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்குகிடமான பகுதியில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் கேரள மாநிலம் திருச்சூர் கடப்புரம் பகுதியை சேர்ந்த முகமது பாசித் என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இளைஞரை கைது செய்தனர். அதன் பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.