சர்ச்சையான சூழலில் கவிஞர் வைரமுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சர்ச்சையான சூழலில் கவிஞர் வைரமுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!


Kavingar vairamuthu admitted in hospital

பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த புகார் ஆனது திரையுலகத்திலும் இந்திய அளவிலும் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

ட்விட்டரில் #MeToo என்ற ஹாஸ் டேக் மூலம் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பற்றி வெளியிட்டு வருகின்றனர். இதில் திரைத்துறை, அரசியல், விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். இந்த இயக்கமானது உலக அளவில் தற்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Vairamuththu

இந்நிலையில் சின்மயி தன்மீது வெளியிட்ட புகாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து இவை அனைத்தும் பொய்யானவை என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சின்மயி இவை அனைத்தும் உண்மையே என்னால் எங்கு கேட்டாலும் நிரூபிக்க முடியும் என பல்வேறு வாதங்களை முன் நிறுத்தினார்.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க மதுரை பசுமலையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த கவிஞர் வைரமுத்துவுக்கு புட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றிரவு டிஸ்சார்ஜ் அவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.