மதுகுடிக்க தாய் பணம் தராததால் சோகம்.. மகன் தூக்கிட்டு தற்கொலை.. கரூரில் நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!Karur Man Suicide

தாயார் மதுபானம் அருந்த பணம் தராத காரணத்தால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிமலை, செஞ்சேரிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் திருமலை. இவரின் மகன் ஆனந்தகுமார் (வயது 34). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

ஆனந்தகுமாருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வருவதால், தற்போது வரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தாயிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். 

அவரின் தாயும் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, இதனால் ஆனந்த குமார் மன உளைச்சலோடு காணப்பட்டுள்ளார். இப்படியான நிலையில் மனஉளைச்சலில் இருந்த ஆனந்தகுமார் வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

Karur

ஆனந்தகுமாரின் தற்கொலை முயற்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பரிதாபமாக பறிபோனது. 

இந்த விஷயம் தொடர்பாக தென்னிமலை காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆனந்த் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.