அரசியல் தமிழகம் சினிமா

இந்த ஒரு பொருள் போதும் ,அவர் புகழ் சொல்ல .,கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஷால் அளித்த வாக்கு.!

Summary:

இந்த ஒரு பொருள் போதும் ,அவர் புகழ் சொல்ல .,கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஷால் அளித்த வாக்கு.!

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார்.

மேலும் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலகை சேர்ந்தவர்கள்,பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின் அரசமரியாதையுடன் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இதில் பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய படம்

இதில் விஷால் பேசும்போது, ‘புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும்’ என்று கூறியுள்ளார்.


Advertisement