கையில் கோழியுடன் வெளியில் வந்த நபர்!! அவர் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்..

கையில் கோழியுடன் வெளியில் வந்த நபர்!! அவர் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்..



karnataka-man-went-with-hen-during-lockdown

கர்நாடகாவில் ஊரடங்கின் போது வெளியே வந்த நபர் ஒருவரை போலீசார் விசாரித்த போது அவர் கூறிய பதில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அதித்தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. 

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டாயமாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பலரும் இதனை பொருட்படுத்தாமல் பல்வேறு காரணங்களை கூறி வெளியில் சென்று வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் மீது போலீசார்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நபர் ஒருவர் கையில் கோழியை வைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளார். அந்த நபரை அழைத்து போலீசார் விசாரித்தபோது அவர் கூறிய காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனது கோழிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கோழியை மருத்துவரிடம் காட்ட வேண்டும் எனவும் அந்த நபர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட போலீசார் சிரிப்பதா அல்லது என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஊரடங்கின் போது வெளியே வர மக்கள் பல காரணங்களை பல்வேறு விதமாக கூறி வருகின்றனர். கொரோனா தாக்கத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.