கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
வரதட்சணை கேட்காதீங்க.. பொண்ணுங்களோட குணத்தை பாருங்க மக்கா... குமரி இளைஞர்களின் நூதன விழிப்புணர்வு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஜெனீஷ் (வயது 25), சுமிஷ் (வயது 25). இவர்கள் இருவரும் பட்டதாரி ஆவார்கள். இருவரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான நடைமுறையை மேற்கொண்டனர்.
அதாவது, வரதட்சணை கொடுமை & ஒழிப்பு தொடர்பாக பல இடங்களுக்கு மணக்கோலத்தில் சென்று தங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருவரும் பதாகை ஏந்தி மணக்கோலத்தில் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
அந்த பதாகையில், "மணப்பெண் தேவை. வரதட்சணையாக கார், பணம், தங்கம் என எதுவும் தேவை இல்லை. சாதி, மத பிரச்னையும் இல்லை. யாரும் வரதட்சணை கேட்க கூடாது. பணத்தை விட குணத்தை பார்த்து பெண்களை தேர்வு செய்யுங்கள்" என்று எழுதியிருந்தனர். இளைஞர்களின் செயல்பாடு காண்போரை கவரவைத்தது.