தமிழகமே அதிர்ச்சி.. 40 முறை சதக்., சதக்.. கள்ளக்காதலியை கைவிட்ட கள்ளக்காதலன் துள்ளத்துடிக்க படுகொலை.!

தமிழகமே அதிர்ச்சி.. 40 முறை சதக்., சதக்.. கள்ளக்காதலியை கைவிட்ட கள்ளக்காதலன் துள்ளத்துடிக்க படுகொலை.!


kanyakumari-nagarcoil-woman-killed-affair-man

தன்னை கைவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த கள்ளக்காதலன் பெண்ணால் குத்தி கொலை செய்யப்பட்டார். கணவனை பிரிந்த பெண் மற்றொரு ஆணை கொலை செய்ததால் பெண்ணொருவரின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது குறித்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், அருகுவிளை கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ் குமார் (வயது35). இவர் ஆரல்வாயமொழி அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியர் ஆவார். அங்குள்ள மணவாளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஷீபா (வைத்து 37). இவர் தனியார் கல்லூரி பேராசிரியர் ஆவார். திருமணம் ஆகி குழந்தைகள் மற்றும் கணவர் இருக்கின்றனர்.

சதீஷ் குமாருடன் ஷீபாவுக்கு பழக்கம் ஏற்படவே, இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஷீபா கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில், சதீஷ் குமாருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே சதீஷ் குமார் சென்னை ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

kanyakumari

திருமணத்திற்கு பின்னர் கள்ளக்காதலி ஷீபாவை கைவிட்ட நிலையில், அவருக்கு சதீஷ் குமாருக்கு திருமணம் ஆன விவகாரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சதீஷை கொலை செய்ய திட்டமிட்ட ஷீபா, கடைசியாக உன்னை பார்க்க வேண்டும். இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என அன்பாக பேசியுள்ளார்.

சதீஷும் ஆரல்வாயமொழி மருந்தகத்திற்கு வரச்சொல்ல, தான் சமைத்த உணவை எடுத்து வந்து ஷீபா பரிமாறி இருக்கிறார். இதனை சாப்பிட்டதும் சதீஷுக்கு உடல் லேசான ஆட்டம் கொடுக்க, உணவில் விஷம் இருப்பது உறுதியானது. சதீஷின் உடல் நிலைகுலைய தொடங்கும்போதே ஷீபா கள்ளக்காதலனை கத்தியால் சரமாரியாக குத்தி கோதை செய்துள்ளார். 

மொத்தமாக 40 முறை கள்ளக்காதலன் சதீஷை குத்தி கொலை செய்த ஷீபா, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தும்போது உண்மை அம்பலமானது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர் ஷீபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.