நீங்க என்னடா செல்பி போஸ் கொடுக்குறீங்க? நான் கொடுக்குறேன் பாரு.. நாகர்கோவிலில் கருங்குரங்கு அட்ராசிட்டி.!

நீங்க என்னடா செல்பி போஸ் கொடுக்குறீங்க? நான் கொடுக்குறேன் பாரு.. நாகர்கோவிலில் கருங்குரங்கு அட்ராசிட்டி.!


Kanyakumari Nagarcoil Selfie Monkey Enjoy with Peoples

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பார்வதிபுரம் ஆலம்பாறை பகுதியில் கருங்குரங்கு ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இந்த குரங்கு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வந்துள்ளதாக உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது. 

அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு வரும் பெரும்பாலான குரங்குகள், வீட்டிற்குள் புகுந்து உணவுகளை எடுத்து சாப்பிடுவது, மரங்களில் உள்ள காய் - கனிகளை சாப்பிடுவது என கூட்டமாக வந்து மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டு செல்லும். சில நேரங்களில் மக்கள் பயத்தால் அவற்றை விரட்ட முற்படும் போது பதில் நடவடிக்கையும் கிடைக்கும். 

kanyakumari

இந்த நிலையில், தற்போது வந்துள்ள கருங்குரங்கு மக்களுக்கு இடையூறு இன்றி அன்புடன் பழகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குரங்குக்கு பழங்கள் மற்றும் பிஸ்கெட் போன்றவற்றை வழங்கி கவனித்து வருகின்றனர். இந்த குரங்குடன் செல்பி எடுக்க சென்றால், அவர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ்கொடுத்தும் வருகிறது. 

இதனால் கருங்குரங்குக்கு செல்பி குரங்கு என்றும் பெயர் வைத்துள்ள உள்ளூர் மக்கள், அதனுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். கருங்குரங்கும் அன்போடு அமைதியாக இருந்து வருவதால், தற்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை.