போலீசின் வாகனத்தை திருடி வழிப்பறி.. ஒர்க் ஷாப்புக்கு வந்த வாகனத்தை ஆட்டயப்போட்டு சம்பவம்.!

போலீசின் வாகனத்தை திருடி வழிப்பறி.. ஒர்க் ஷாப்புக்கு வந்த வாகனத்தை ஆட்டயப்போட்டு சம்பவம்.!


Kanyakumari Gang Hijack Police Vehicle Robbery

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், கருங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் அஸ்வின் (வயது 24). இவர் கருங்கல் பேருந்து நிறுத்தம் அருகே வேன் ஸ்டாண்டில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை நேரத்தில் அவர் இருசக்கர வாகனத்தில் வேன் ஸ்டாண்டுக்கு வந்தபோது, காவல்துறையினரின் வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அஸ்வினை இடைமறித்து ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளது. 

அக்கும்பலின் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்ட காரணத்தால், அவர் காவலர்களின் வாகனத்தை வீடியோ எடுத்து உடனடியாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர், நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட காவல்துறை வாகனம் குலசேகரம் காவல் நிலையத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 

kanyakumari

குலசேகரம் காவல் நிலையத்தில் இருந்த வாகனம் பழுதான காரணத்தால், அதனை பழுதுநீக்க ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளனர். ஒர்க் ஷாப்பில் இருந்து வாகனத்தை திருடிய மர்ம கும்பல், அதனை வைத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. தீவிர விசாரணையில் போஸ்கொ டைஸிங் (வயது 38), ரூபன் (வயது 38), விஷ்ணு (வயது 27), ஹிட்லர் (வயது 45) ஆகியோர் குற்றச்செயலில் ஈடுபட்டது அம்பலமானது. தலைமறைவான ஹிட்லரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.