அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
குளத்தில் நண்பர்களுடன் உற்சாக குளியல்; அக்கரைக்கு நீந்த ஆசைப்பட்டு இளைஞர் பரிதாப பலி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பெனில். இவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில், விடுமுறை தினமான இன்று அவர் கரையான்குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
அங்கு நண்பர்களுடன் உச்சமாக நீரில் நீந்தி குளித்துக்கொண்டு இருந்தவர்கள், திடீரென இக்கரையில் இருந்து அக்கரை செல்லாம் என பேசி இருக்கிறன்றனர். பெனிலும் நீச்சலடித்து அங்கிருந்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் சோகம்; 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி.! தூத்துக்குடியில் பரிதாபம்.!
6 மணிநேரம் போராடி உடலை மீட்ட அதிகாரிகள்
குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றபோது பெனிலால் நீந்த முடியவில்லை. நீரில் தத்தளித்தவர் உதவிக்காக அலறியுள்ளார். அவரின் நண்பர்களாலும் நடுப்பகுதிக்கு விரைந்து செல்ல முடியவில்லை. உடனடியாக அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், பெனிலின் உடலை 6 மணிநேரம் தேடி மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி வேன் ஓட்டுனருக்கு மாரடைப்பு; நொடியில் 20 மாணவ-மாணவிகளின் உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!