தமிழகம்

காதலை ஏற்க மறுத்ததால் மாணவன் செய்த வெறிச்செயல்.. கன்னியாகுமரியில் பயங்கரம்.!

Summary:

காதலை ஏற்க மறுத்ததால் மாணவன் செய்த வெறிச்செயல்..கன்னியாகுமரியில் பயங்கரம்.!

கத்தியைக் காட்டி தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு, வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகாமையில் மேல சங்கரன் குழியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் வெள்ளமோடி என்ற பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு விஜயகுமார் பல்வேறு நாட்களாக தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். ஆனால் மாணவியோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்து வந்துள்ளார்.

பல நாட்களாக தனது காதலை கூறியும் மாணவி அதற்கு ஒப்புக் கொள்ளாத காரணத்தால், கோபமடைந்த விஜயகுமார் ஒருநாள் கத்தியை காட்டி மாணவியை பயங்கரமாக மிரட்டி தன்னை காதலித்தே தீர வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வதென்று அறியாமல் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement