
கத்தியுடன் மனைவிக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., நகர துணைத்தலைவர்.! ஸ்ரீபெரும்புதூரில் பகீர்.!
சுயேச்சை வேட்பாளராக களமிறக்கப்பட்ட மனைவிக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கணவர் கத்தி முனையில் வாக்கு சேகரித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், இராமாபுரத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 42). இவர் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் நகர எஸ்.சி., எஸ்.டி துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவரின் மனைவி தனலட்சுமி.
இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1 ஆவது வார்டில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், கட்சி மேலிடம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் பூபாலன் மனைவியை சுயேச்சை வேட்பாளராக களமிறக்கி இருக்கிறார்.
தற்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூபாலன் தனது மனைவியுடன் மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, கைகளில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த தகவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கத்தி முனையில் வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்த பூபாலனை கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement