அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பக்கா ஸ்கெட்ச் போட்டு ஊராட்சிமன்ற தலைவர் திட்டமிட்டு படுகொலை... பெட்ரோல் குண்டு வீசி நடந்த பயங்கரம்.!
ஊராட்சி மன்ற தலைவரை திட்டமிட்டு வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசன். இவருக்கு நேற்று இரவில் செல்போன் அழைப்பு வந்துள்ளது. அழைப்பை பேசியவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது, வெங்கடேசனை ராகவேந்திரா நகர் அருகில் மர்ம கும்பல் இடைமறித்து பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் லேசான காயமடைந்த வெங்கடேசனை, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மணிமங்கலம் காவல் துறையினர், வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைடனானர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசனுக்கு செல்போன் அழைப்பு வந்த பின்னரே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அவரை திட்டமிட்டு வீட்டில் இருந்து வெளியே வரவழைத்தது அம்பலமாகியுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.