தமிழகம்

கூட்டத்திற்கு மத்தியில் கம்பீரமாக ஒரு ஆண் நபருடன் கம்பு சண்டையிடும் பெண்! வைரலாகும் வீடியோ.

Summary:

Kampu sandai lady

அந்த காலத்தில் பெண்கள் படிப்பறிவு இன்றி ஆண்களுக்கு பயந்து கோழைகளாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று ஆண்களுக்கு நிகராக எல்லா துறையிலும் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்படுகின்றனர்.

ஆனால் எல்லா இடத்திலும் பெண்கள் மதிக்கப்படவில்லை.ஒரு சில இடங்களில் இன்னும் பெண்கள் அடிமைகளாகவே கருதப்படுகின்றனர். இதனை எதிர்த்து அந்த போராடினால் தான் அந்த பெண்கள் உயரத்தை அடைய முடியும்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ஆணுக்கு நிகராக கம்பீரமாக கம்பு சண்டையிடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.


Advertisement