தமிழகம்

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புரனமைத்தல் எப்படி! வைரலாகும் கமலின் ட்விட்டர் பதிவு.

Summary:

Kamalhasan told some planes

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்நோயானது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் கொரோனாவுக்கு பிறகு புரனமைத்தல் எப்படி என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சுகாதாரத் துறையே புதிய பாதுகாப்பு துறை, உழவனுக்கு வந்தனை செய்வோம், அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப்படுத்துங்கள். வறுமை ஒழிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல திட்டங்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

மேலும் இந்தியாவை வல்லரசு நாடாக்கும் கனவை நோக்கி பயணிக்கும் நேரம் இது என்ற பல நீண்ட கோரிக்கைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.


Advertisement