"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!
ஐயோ நகை போனாலும் பரவாயில்லை!,, என் புருஷன் போயிட்டாரே..! கதறிய பெண்ணை கம்பி எண்ண வைத்த போலீஸ்..!
ஐயோ நகை போனாலும் பரவாயில்லை!,, என் புருஷன் போயிட்டாரே..! கதறிய பெண்ணை கம்பி எண்ண வைத்த போலீஸ்..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30) இவருக்கும் பண்ருட்டி, தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகள் கல்பனாவுக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், சீனிவாசன்-கல்பனா தம்பதியினரின் முதல் திருமண நாளை கொண்டாடும் விதமாக சீனிவாசன் தனது மனைவியுடன் கடந்த 1.6.2013 அன்று பண்ருட்டி வந்தார். இதன் பின்னர் பண்ருட்டியில் இருந்து பைக்கில் கடலூர் சென்றனர். கடலூர் சில்வர்பீச் சென்று பின்னர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சினிமா தியேட்டரில் சினிமா பார்த்தனர்.
அன்றைய பொழுதை மகிச்சியாக கழித்த சீனிவாசன், இரவு 7 மணி அளவில் மனைவியுடன் வீடு திரும்பினார். அப்போது பண்ருட்டியை அடுத்த திருவதிகை ராசாபாளையம் அருகில் வந்த போது இவர்களது பைக்கை திடீரென்று வழி மறித்த கும்பலால் சீனிவாசன் கொலை செய்யப்பட்டார். இந்த கும்பல் கல்பனாவை எதுவும் செய்யவில்லை.
கணவனை கொலை செய்து விட்டு, தனது நகைகளை பறித்து கொண்டதாக கல்பனா நாடகமாடினார். பின்னர் காவல்துறையினரின் விசாரணையில் கல்பனா அவரது கள்ளக்காதலன் தினேஷ் பாபு என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகம் ஆடியது அம்பலம் ஆனது. இதனை தொடர்ந்து, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில், கூலிப் படையாக செயல்பட்ட முரளி என்பவரும் கைதானார். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கல்பனா மற்றும் தினேஷ்பாபு இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.