அரசு பேருந்து - டிராக்டர் மோதி பயங்கர விபத்து : 3 பேர் துள்ளத்துடிக்க பலி.. மேம்பாலத்தில் பயங்கரம்.!

அரசு பேருந்து - டிராக்டர் மோதி பயங்கர விபத்து : 3 பேர் துள்ளத்துடிக்க பலி.. மேம்பாலத்தில் பயங்கரம்.!


Kallakurichi Govt Bus Tractor Hit Accident 3 Died

மேம்பாலத்தில் டிராக்டர் - அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, கெடிலம் மேம்பாலத்தில் விழுப்புரம் நோக்கி பயணம் செய்த அரசு பேருந்தும், எதிர்திசையில் வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், இருவாகனத்திலும் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளனர். 

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், பிற வாகன ஓட்டிகள் அவசர ஊர்திக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Kallakurichi

2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இவ்விபத்தில் மொத்தமாக 2 பெண்கள், 1 ஆண் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 8 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் பயணம் செய்த போது வாகனம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.