தமிழகம் சினிமா

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் பிடித்த சாப்பாடு என்ன தெரியுமா.? விஜய்சேதுபதி கொடுத்த சுவாரஸ்ய தகவல்.!

Summary:

கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் பிடித்த சாப்பாடு என்ன தெரியுமா.? விஜய்சேதுபதி கொடுத்த சுவாரஸ்ய தகவல்.!

உலக அளவில் பிரபலம் ஆன மாஸ்டர் செஃப் ஷோவை தற்போது இந்தியாவிலும் சன் டிவி அறிமுகப்படுத்தி இருக்கிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது சன் டிவியின் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கி வருகின்றார்.

மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட்டில் கிர்த்திகா கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் பிடித்த "கொஸ்து சம்பா சாதம்" செய்து அசத்தி பால்கனிக்கு முன்னேறினார்.

நேற்றைய எபிசோட்டில் கிர்த்திகா, விஜய் சேதுபதியிடம் கூறுகையில், சிதம்பரத்திற்கு ரொம்ப பேமஸ் கொஸ்து சம்பா சாதம்னு என்னோட பாட்டி சொல்லுவாங்க. கலைஞர் கூட எப்போல்லாம் சிதம்பரம் வர்ராங்களோ அப்போல்லாம் அவங்க வந்து கொஸ்து சம்பா சாதம் கேட்டு வாங்கி சாப்புடுவாங்க. அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது கொஸ்து சம்பா சாதம் னு என் பாட்டி சொல்லுவாங்க. அவங்க சொல்லி தான் எனக்கு அந்த விஷயம் தெரியும் என தெரிவித்தார். இதனை விஜய்சேதுபதியும் நேற்றைய எபிசோட்டில் தெரிவித்துள்ளார்.


Advertisement