பெண்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் இன்பச் செய்தி! மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.1000 இல்ல ரூ.1500.... ? அமைச்சரின் சூசக பேச்சால் மக்கள் கொண்டாட்டத்தில்.!!!



kalaignar-magalar-urimai-thogai-hike-possible

தமிழக பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து தற்போது மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

திமுக தேர்தல் வாக்குறுதி

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதாகும். ஆட்சி அமைந்த பின்பு நிதிநிலை காரணமாக திட்டம் தாமதமான நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

திட்டம் தொடங்கப்பட்ட நாள்

இதனைத் தொடர்ந்து, 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று முதற்கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் விடுபட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க: குஷியோ குஷி! 15 லட்சம் பேருக்கு டிச- 12 முதல் ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000...! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு!

இரண்டாம் கட்ட பயனாளிகள்

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத்தில் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பயனாளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். இதன் மூலம் பெண்கள் நலத்திட்டம் மேலும் விரிவடைந்தது.

அமைச்சரின் சூசகம்

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை மேலும் உயர்த்தப்படும் என உறுதியளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல்லில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி, "விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்" என தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு, தற்போது வழங்கப்படும் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படுவதை குறிப்பதாகவே திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரூ.1500 உயர்வு நடைமுறைக்கு வந்தால், தமிழக பெண்களின் பொருளாதார நிலை மேலும் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

 

இதையும் படிங்க: குஷியோ குஷி! மேலும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்வு...? முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!