#Breaking 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!

#Breaking 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!



Judgment for election

 

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையம் நேற்று நடைபெற்றது. அந்த மனு மீதான விசாரணையின் போது, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

election

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.