சாத்தான்குளம் சம்பவம்! குரல் கொடுத்த ஜெயம் ரவி.! என்ன கூறியுள்ளார்? - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சினிமா

சாத்தான்குளம் சம்பவம்! குரல் கொடுத்த ஜெயம் ரவி.! என்ன கூறியுள்ளார்?

கடந்த 19ஆம் தேதி ஊரடங்கை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அப்பாவிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த சாத்தான்குளம் சம்பவம் இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ளது. விசாரணைக்கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


விசாரணைக் கைதிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத் தன்மையற்ற இந்த செயலுக்குநீதி வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo