சற்று முன் தமிழகஅரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! உற்சாகத்தில் மாணவர்கள் !

january 14 holiday for bogi


january 14 holiday for bogi

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் நாள் கோலாகலமாக கொண்டப்படவுள்ளது.அதனை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்புகள், சிறப்பு பேருந்துகள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, வரும் 15, 16, 17 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. 

மேலும் திங்கட்கிழமை ஒரு நாள் மட்டுமே வேலைநாள் என்ற நிலையில் வரும் 14ம் தேதி திங்கள்கிழமை போகி அன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும் 14ம் தேதி விடுமுறையை ஈடு செய்ய, பிப்ரவரி 9ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.