ஜெயலலிதா- சசிகலாவை திமுகவினர் லாரியை விட்டு ஏத்தி கொலை செய்ய பார்த்தார்கள்.! ஓப்பனாக பேசிய சசிகலாவின் தம்பி மகன்.!
சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் "போஸ் மக்கள் பணியகம்" என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். சசிகலா தம்பி திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அதில், அவர் மகன் ஜெய் ஆனந்த் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார்.
சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சசிகலாவை இழிவாக பேசியதாகவும், அவரது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெய்ஆனந்த் திவாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதயநிதி பேசிய பேச்சைத் திரும்பப் பெறவில்லை என்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அண்ணா திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த் கூறுகையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு உடைக்கப்பட்டு ஒன்று சேர்ந்தால், அதிமுக தான் வெற்றியடையும். சசிகலா அவர்கள் வெளியே வந்தவுடன் பல மாற்றங்கள் ஏற்படும்.
உண்மையிலே திமுக தான் மாபியா. ஜெயலலிதா அவர்களும், சசிகலா அவர்களும் பாண்டிச்சேரி வழியாக காரில் வந்தபோது, திமுகவினர் தான் லாரியை விட்டு மோதி கொலை செய்ய முயற்சித்தார்கள். அப்போது ஏற்பட்ட விபத்தால் சசிகலாவிற்கு இன்றளவும் ஒரு கண்ணில் நிமிடத்திற்கு ஒருமுறை கணீர் வரும் என தெரிவித்துள்ளார்.