வேலைக்கு சேர்ந்த மறுநாளே இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்.

வேலைக்கு சேர்ந்த மறுநாளே இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்.


itwoman-suspected-death-in-chennai-after-joining-first

சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் டானிடா ஜூலியஸ் என்கிற 24 வயது இளம்பெண் நேற்றைக்கு முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

வேலைக்கு சேர்ந்த மறுதினம் அதாவது நேற்று மீண்டும் தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார் டானிடா ஜூலியஸ். காலை 10 மணி முதல் தனது அன்றாட வேலைகளை கவனித்துவந்துள்ளார் டானிடா. இந்நிலையில் மாலை 6 . 30 மணி அளவில் தான் பணிபுரியும் அலுவலகத்தின் 8 வது மாடிக்கு சென்றுள்ளார்.

suicide

இந்நிலையில் 8 வது மாடியில் இருந்து டானிடா திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலமாக அடிபட்டதில் சம்பவ இடத்திலையே டானிடா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டானிடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், இது தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வேலைக்கு சேர்ந்த மறுநாளே டானிடா இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

suicide